
என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.
ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.
செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள்.
இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.
No comments:
Post a Comment